தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் (TNSTC) மாபெரும் வேலைவாய்ப்பு 2026: 1,518 அப்ரண்டிஸ் காலியிடங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முழு விவரங்கள் – TNSTC Apprentice Recruitment 2026

TNSTC Apprentice Recruitment 2026: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (TNSTC), தமிழ்நாடு முழுவதும் உள்ள தங்களது மண்டல அலுவலகங்கள் மற்றும் பணிமனைகளில் (Depots) தொழிற்பயிற்சி முடிப்பதற்கான 1,518 அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்ப புதிய மாபெரும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

TNSTC Apprentice Recruitment 2026
TNSTC Apprentice Recruitment 2026

இத்தேர்விற்கு எந்தவிதமான எழுத்துத் தேர்வும் (No Exam) கிடையாது. பொறியியல் பட்டதாரிகள் (Engineering Graduates), டிப்ளமோ (Diploma) முடித்தவர்கள் மற்றும் பி.ஏ, பி.எஸ்சி, பி.காம், பி.பி.ஏ, பி.சி.ஏ உள்ளிட்ட கலை மற்றும் அறிவியல் பட்டதாரிகள் (Non-Engineering Graduates) அனைவரும் இத்தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியான நபர்கள் NATS போர்ட்டல் வழியாக ஆன்லைனில் 28.08.2026-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பிரிவு வாரியான காலியிடங்கள், கல்வித் தகுதி மற்றும் உதவித்தொகை (Stipend)

TNSTC ஆட்சேர்ப்பில் அறிவிக்கப்பட்டுள்ள 3 முக்கியப் பிரிவுகள், அதற்கான காலியிடங்கள், கல்வித் தகுதிகள் மற்றும் மாதாந்திர உதவித்தொகை விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.

Whatsapp Group Join
Telegram Channel Join
Whatsapp Channel Join

1. Graduate Apprentices (Engineering / Technology)

  • காலியிடங்கள்: 457

  • மாத உதவித்தொகை (Stipend): ரூ. 12,300/-

  • கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சம்பந்தப்பட்ட பொறியியல் துறையில் (Automobile, Mechanical, Electrical, Civil, CS/IT etc.) முழுநேரமாகப் (Regular – Full Time) படித்து முதன்மை வகுப்பில் (First Class B.E / B.Tech) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. Diploma in Engineering (Technician) Apprentices

  • காலியிடங்கள்: 438

  • மாத உதவித்தொகை (Stipend): ரூ. 10,900/-

  • கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட தொழல்நுட்பக் கல்வி நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட பிரிவில் முழுநேரமாகப் படித்து முதன்மை வகுப்பில் (First Class Diploma in Engineering) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. Graduate Apprentices (Non-Engineering)

  • காலியிடங்கள்: 623

  • மாத உதவித்தொகை (Stipend): ரூ. 12,300/-

  • கல்வித் தகுதி: UGC அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் முழுநேரமாகப் படித்து பட்டம் பெற்றிருக்க வேண்டும் (BA / B.Sc / B.Com / BBA / BBM / BCA).

முக்கியக் குறிப்பு: 2022, 2023, 2024, 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் பட்டம் / டிப்ளமோ முடித்தவர்கள் மட்டுமே இந்த Apprenticeship-க்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். ஏற்கெனவே அப்ரண்டிஸ் பயிற்சி முடித்தவர்களோ அல்லது 1 வருடத்திற்கு மேல் பணி அனுபவம் உள்ளவர்களோ விண்ணப்பிக்க முடியாது.

வயது வரம்பு மற்றும் விண்ணப்பக் கட்டணம்

  • வயது வரம்பு: மத்திய அரசின் அப்ரண்டிஸ்ஷிப் விதிகளின்படி (Apprenticeship Rules) வயது வரம்பு நிர்ணயிக்கப்படும்.

  • விண்ணப்பக் கட்டணம்: இத்தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க எந்தவொரு பிரிவினருக்கும் விண்ணப்பக் கட்டணம் எதுவும் கிடையாது.

தேர்வு செய்யும் முறை (Selection Process)

இத்தேர்விற்கு எந்தவிதமான எழுத்துத் தேர்வோ (Written Exam) அல்லது நேர்காணலோ (Interview) கிடையாது.

  1. தரவரிசைப் பட்டியல் (Merit List): பட்டப்படிப்பு / டிப்ளமோ படிப்பில் பெற்ற ஒட்டுமொத்த மதிப்பெண்கள் (Percentage / CGPA) அடிப்படையில் முதற்கட்டமாகச் சுருக்கப் பட்டியல் செய்யப்படும்.

  2. சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification): தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு மண்டல அளவில் அசல் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு இறுதிப் பயிற்சி நியமனம் வழங்கப்படும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை – எளிய படிநிலைகள்

  1. மத்திய அரசின் தேசிய தொழிற்பயிற்சி போர்ட்டலான https://nats.education.gov.in/ பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.

  2. ஏற்கெனவே NATS போர்ட்டலில் பதிவு செய்யாதவர்கள், ‘Student Registration’ என்பதைத் கிளிக் செய்து உங்களது விவரங்களைப் பதிவு செய்து Student Enrolment Number-ஐ உருவாக்க வேண்டும்.

  3. போர்ட்டலில் உள்நுழைந்து (Login), Establishment Search என்ற பகுதிக்குச் செல்லவும்.

  4. அங்கு Search பாக்ஸில் “Tamil Nadu State Transport Corporation” அல்லது உங்களது குறிப்பிட்ட மண்டலத்தின் (Kumbakonam, Coimbatore, Madurai, Salem, Tirunelveli, Villupuram) TNSTC பெயரைத் தேட வேண்டும்.

  5. அறிவிப்பில் உள்ள ‘Apply’ என்ற பொத்தானைக் கிளிக் செய்து உங்களது விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.

  6. சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை எதிர்காலப் பயன்பாட்டிற்காகப் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளவும்.

TNSTC Apprentice Recruitment 2026
TNSTC Apprentice Recruitment 2026

முக்கியத் தேதிகள்

  • ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தொடங்கிய நாள்: 28.07.2026

  • NATS போர்ட்டலில் பதிவு செய்ய கடைசி நாள்: 28.08.2026

Official Notification Visit Here
Official Website  Visit Here   
For More Info Visit Here

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தில் தொழிற்பயிற்சி பெற்று தங்களது கரியர் அனுபவத்தை உயர்த்த விரும்பும் 2022 முதல் 2026 வரை தேர்ச்சி பெற்ற பட்டதாரி இளைஞர்கள், கடைசி நேர இணையதள நெரிசல்களைத் தவிர்க்கும் பொருட்டு முன்கூட்டியே ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Comment