டிஎன்பிஎஸ்சி தேர்வு இல்லாமலே அரசு வேலை! கடைசி தேதி நெருங்குது.. மிஸ் பண்ணாதீங்க || TIDCO Office Assistant Recruitment 2026

TIDCO Office Assistant Recruitment 2026: “கையில் பெரிய டிகிரி இல்லையே.. வெறும் எட்டாவது, பத்தாவது தான் படிச்சிருக்கோம்.. நமக்கு எப்படி நல்ல சம்பளத்துல ஒரு நிரந்தரமான அரசு வேலை கிடைக்கும்?” என்று கவலைப்படும் இளைஞர்களுக்கு, இதோ ஒரு சூப்பரான நல்வாய்ப்பு உங்கள் கதவைத் தட்டியுள்ளது மிஸ் பண்ணாதீங்க .

TIDCO Office Assistant Recruitment 2026
TIDCO Office Assistant Recruitment 2026

தமிழக அரசின் தொழில் துறையின் கீழ் இயங்கும் மிக முக்கியமான நிறுவனமான தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தில் (TIDCO) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

குறிப்பாக அதுவும் எழுத்துத் தேர்வு (Written Exam) எதுவும் இல்லாமல், நேரடி நியமனம் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். சென்னையில் அரசு வேலை தேடுபவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். இது குறித்த முழு விவரங்களை இங்கே விரிவாகக் காண்போம் வாருங்கள்.

இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.

Whatsapp Group Join
Telegram Channel Join
Whatsapp Channel Join

பணியிட விவரங்கள்:

தமிழக அரசின் டிட்கோ (TIDCO) நிறுவனத்தில் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

  • பதவியின் பெயர்: அலுவலக உதவியாளர் (Office Assistant).

  • மொத்த காலியிடங்கள்: 02. (இடங்கள் குறைவாக உள்ளதே என்று தயங்க வேண்டாம், போட்டி போட்டால் அந்த ஒரு இடம் உங்களுக்கானதாக மாறலாம்).

  • பணியிடம்: சென்னை – எழும்பூர் (Egmore).

  • பணி வகை: இது ஒரு நிரந்தரத் தன்மை கொண்ட நேரடி நியமனப் பணியாகும் (Direct Recruitment).

விண்ணப்பிக்கும் தகுதிகள்:

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கப் பெரிய பட்டப்படிப்புகள் எதுவும் தேவையில்லை. அடிப்படைத் தகுதிகள் இருந்தாலே போதும்.

  1. கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும். (அதற்கு மேல் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு படித்தவர்களும் தாராளமாக விண்ணப்பிக்கலாம்).

  2. கூடுதல் திறன்: விண்ணப்பதாரருக்குத் தமிழில் நன்றாக எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். முக்கியமாக, அலுவலகப் பணிகளுக்குத் தேவை என்பதால் மிதிவண்டி (Cycle) ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

  3. வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 01.07.2025 தேதியின்படி, 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

    • பொதுப் பிரிவினர் (General): 18 முதல் 32 வயது வரை.

    • பிசி / எம்பிசி (BC/MBC): 18 முதல் 34 வயது வரை (2 ஆண்டுகள் தளர்வு).

    • எஸ்சி / எஸ்டி / விதவைகள்: 18 முதல் 37 வயது வரை (5 ஆண்டுகள் தளர்வு).

சம்பளம் மற்றும் சலுகைகள் விவரம்:

அலுவலக உதவியாளர் பணி என்றாலும், இது ஒரு அரசு நிறுவனம் என்பதால் சம்பளம் மற்றும் படிகள் (Allowances) மிகச் சிறப்பாக உள்ளன.

  • சம்பளம்: மாதம் ரூ.15,700 இல் தொடங்கி ரூ.58,100 வரை சம்பள விகிதம் (Pay Matrix Level-1) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுபோக அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி உள்ளிட்ட இதர அரசுச் சலுகைகளும் உண்டு.

தேர்வு முறை:

வழக்கமாக அரசு வேலை என்றாலே டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதி, ரிசல்ட்டுக்காகக் காத்திருக்க வேண்டும். ஆனால், இந்த வேலைக்கு எழுத்துத் தேர்வு கிடையாது.

விண்ணப்பிக்கும் நபர்களில் தகுதியானவர்களைத் தேர்வு செய்து (Shortlist), அவர்களுக்கு நேரடியாக நேர்காணல் (Interview) மட்டுமே நடத்தப்படும். அதில் வெற்றி பெறுபவர்களுக்குத் தான் வேலை கிடைக்கும்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பத்தார்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாது. தபால் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

  1. முதலில் www.tidco.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.

  2. அதில் உள்ள “Notification” பகுதியில் விண்ணப்பப் படிவத்தைப் டவுன்லோட் செய்து, பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும்.

  3. விண்ணப்பத்தைத் தெளிவாகவும், பிழையின்றியும் பூர்த்தி செய்யவும்.

  4. கல்விச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை, முன்னுரிமைச் சான்றிதழ் (இருந்தால்) ஆகியவற்றின் நகல்களை இணைக்கவும்.

  5. பூர்த்தி செய்த விண்ணப்பத்தை உரிய உறையில் வைத்து, தபால் மூலமாக அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

பொது மேலாளர் (பணி & நிர்வாகம்), தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ), எண். 19A, ருக்மணி லட்சுமிபதி சாலை, எழும்பூர், சென்னை – 600008.

முக்கிய தேதி

விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 30.01.2026

TIDCO Office Assistant Recruitment 2026
TIDCO Office Assistant Recruitment 2026

விண்ணப்பிப்பவர்கள் கருத்தில்  கொள்ள வேண்டியது:

எட்டாம் வகுப்பு தகுதி என்பதால், இந்தப் பணிக்குப் போட்டி அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே, கடைசி தேதி வரை காத்திருக்காமல், இன்றே விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அனுப்புங்கள். அரசு வேலையில் சேர இது ஒரு பொன்னான வாய்ப்பு! நன்றி…

இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.

Whatsapp Group Join
Telegram Channel Join
Whatsapp Channel Join

Official Notification: 

Apply Link:

For More Job Info:

Leave a Comment