அரசு நிறுவனத்தில் 7150 அப்ரண்டிஸ் காலியிடங்கள்! டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு! விண்ணப்பிக்க – SBI Apprentice Recruitment 2026

SBI Apprentice Recruitment 2026: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (State Bank of India – SBI) நாடு முழுவதும் உள்ள தங்களின் பல்வேறு வங்கி கிளைகளில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது (அறிவிப்பு எண்: CRPD/ APPR/ 2026-27/ 07). வங்கித் துறையில் தங்களது கரியரைத் தொடங்கக் காத்திருக்கும் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் (Any Degree) பெற்ற இளைஞர்களுக்கு இது ஒரு மிகச்சிறந்த நல்வாய்ப்பாகும்.

SBI Apprentice Recruitment 2026
SBI Apprentice Recruitment 2026

இந்த புதிய அறிவிப்பின்படி, இந்தியா முழுவதும் மொத்தம் 7,150 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பதவிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி தற்பொழுது நீட்டிக்கப்பட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள ஆண், பெண் இருபாலரும் இதற்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதிகள், வயது வரம்பு மற்றும் உதவித்தொகை விபரங்கள்

மாத உதவித்தொகை (Stipend): அப்ரண்டிஸ் பயிற்சி காலத்தின் போது தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாதம் ரூ. 15,000/- உதவித்தொகையாக (Stipend) வழங்கப்படும்.

இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.

Whatsapp Group Join
Telegram Channel Join
Whatsapp Channel Join

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் (Graduation / Bachelor’s degree in any discipline) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 20 வயது பூர்த்தியடைந்தவராகவும் 28 வயதிற்கு மிகாதவராகவும் இருத்தல் வேண்டும்.

அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வுகள்:

  • OBC பிரிவினர்: 3 ஆண்டுகள் வயது தளர்வு உண்டு.

  • SC / ST பிரிவினர்: 5 ஆண்டுகள் வயது தளர்வு உண்டு.

  • மாற்றுத்திறனாளிகள் – PwBD (Gen / EWS): 10 ஆண்டுகள்

  • மாற்றுத்திறனாளிகள் – PwBD (OBC): 13 ஆண்டுகள்

  • மாற்றுத்திறனாளிகள் – PwBD (SC / ST): 15 ஆண்டுகள்

  • முன்னாள் ராணுவத்தினர் (Ex-Servicemen): அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டண விவரங்கள்

  • எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் (SC / ST / PwBD / Ex-Servicemen): எந்தவிதமான விண்ணப்பக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. முற்றிலும் இலவசமாக விண்ணப்பிக்கலாம்.

  • இதர பிரிவினர் (General, OBC, EWS): ரூ. 300/- மட்டும் விண்ணப்பக் கட்டணமாக ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யும் முறை (Selection Process)

விண்ணப்பதாரர்கள் பின்வரும் இரண்டு முக்கியக் கட்டப் பரிசோதனைகள் மூலம் தகுதிப் பட்டியலின்படி முறைப்படி தேர்வு செய்யப்படுபவர்கள்:

  1. எழுத்துத் தேர்வு (Written Exam): ஆன்லைன் முறையில் கொள்குறி வகை வினாக்களாக இத்தேர்வு நடைபெறும்.

  2. உள்ளூர் மொழித் திறன் தேர்வு (Local Language Proficiency Test – LLPT): விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்கும் மாநிலத்தின் அதிகாரப்பூர்வ உள்ளூர் மொழியை எழுத, படிக்க மற்றும் பேசத் தெரிந்திருக்கிறார்களா என்பதை உறுதி செய்ய இத்தேர்வு நடத்தப்படும் (தமிழக மாணவர்களுக்குத் தமிழ் மொழித் திறன் சரிபார்க்கப்படும்).

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை – எளிய படிநிலைகள்

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 19.05.2026 முதல் 15.06.2026 வரை ஆன்லைன் வழியாக மட்டுமே தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும். விண்ணப்பிக்கும் வழிமுறைகள் பின்வருமாறு:

  1. முதலில் எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையதளப் பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.

  2. அங்கு “Careers” பிரிவில் உள்ள “Current Openings” பகுதிக்குச் சென்று Apprentice Recruitment 2026-27 (CRPD/ APPR/ 2026-27/ 07) என்ற அறிவிப்பைத் திறந்து முழுமையாகப் படித்துத் தகுதிகளை உறுதி செய்ய வேண்டும்.

  3. அடுத்து “Apply Online” என்பதை கிளிக் செய்து, “New Registration” என்பதைத் தேர்வு செய்து உங்களது பெயர், கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்துப் பதிவு செய்ய வேண்டும்.

  4. வெற்றிகரமாகப் பதிவு செய்த பின், உங்களது லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்டு கொண்டு உள்நுழைய (Login) வேண்டும்.

  5. ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் உங்களது தனிப்பட்ட விவரங்கள், முகவரி, கல்வித் தகுதிகள் மற்றும் மாநில விருப்பங்களைச் சரியாக நிரப்ப வேண்டும்.

  6. தொடர்ந்து உங்களது அண்மைக்கால பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (Photo), கையொப்பம் (Signature) மற்றும் கல்விச் சான்றிதழ்களைச் சரியான அளவில் ஸ்கேன் செய்து ஆன்லைனில் பதிவேற்றம் (Upload) செய்ய வேண்டும்.

  7. விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டிய பிரிவினர் ஆன்லைன் நெட் பேங்கிங் அல்லது கார்டு மூலமாகக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

  8. உள்ளீடு செய்த அனைத்து விவரங்களையும் இறுதிச் சமர்ப்பிப்பிற்கு முன் ஒருமுறைக்கு இருமுறைச் சரிபார்த்துக் கொண்டு ‘Submit’ செய்ய வேண்டும்.

  9. விண்ணப்பம் வெற்றிகரமாகச் சமர்ப்பிக்கப்பட்டவுடன், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை (Application Form) எதிர்காலப் பயன்பாட்டிற்காகப் பதிவிறக்கம் செய்தோ அல்லது பிரிண்ட் அவுட் எடுத்தோ பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும்.

SBI Apprentice Recruitment 2026
SBI Apprentice Recruitment 2026

முக்கியத் தேதிகள்

  • ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தொடங்கிய நாள்: 19.05.2026

  • ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 15.06.2026 (கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது)

Official Notification Visit Here
Official Website  Visit Here   
For More Info Visit Here

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியில் அப்ரண்டிஸ் பயிற்சி பெற்று தங்களது வங்கிப் பணி அனுபவத்தைத் தொடங்க விரும்பும் தகுதியான பட்டதாரி இளைஞர்கள், இந்த நீட்டிக்கப்பட்ட இறுதித் தேதிக்கு முன்பாகவே தங்களது விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Comment