Erode District Library Assistant Recruitment 2026: ஈரோடு மாவட்டம், அரசலூர் ஓடநிலையில் அமைந்துள்ள தீரன் சின்னமலை மணிமண்டபத்தில் காலியாக உள்ள நூலகர் மற்றும் காப்பாளர் பணியிடத்தை நிரப்பத் தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் அரசு பணி தேடும் இளைஞர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும்.

பணியின் விவரங்கள் மற்றும் சம்பளம்
இந்த அறிவிப்பின்படி, ‘நூலகர் மற்றும் காப்பாளர்’ (Librarian & Caretaker) பணிக்கு ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ₹7,700 முதல் ₹24,200 வரை ஊதியம் வழங்கப்படும். இது ஒரு அரசுப் பணியாகும்.
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.
கல்வித் தகுதி மற்றும் தொழில்நுட்பத் தகுதி
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பின்வரும் தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும்:
-
பத்தாம் வகுப்பு (10th Standard) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
-
ஏதாவது ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் நூலக அறிவியல் சான்றிதழ் படிப்பு (Certificate in Library and Information Science – C.L.I.S) முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரம்
விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு பிரி வாரியாக மாறுபடுகிறது:
-
பொதுப் பிரிவு (General): 32 வயது வரை.
-
BC / MBC பிரிவினர்: 34 வயது வரை.
-
SC / ST பிரிவினர்: 37 வயது வரை.
விண்ணப்பிக்கும் முறை (How to Apply)
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் (Offline) மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
-
முதலில் ஈரோடு மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான erode.nic.in-இல் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யவும்.
-
விண்ணப்பத்தில் உங்களது பெயர், கல்வித் தகுதி, முகவரி போன்ற விவரங்களைப் பூர்த்தி செய்து, சமீபத்திய 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை இணைக்கவும்.
-
பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் உங்களின் கல்விச் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ் மற்றும் சி.எல்.ஐ.எஸ் (C.L.I.S) சான்றிதழ் நகல்களை இணைக்க வேண்டும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், 3வது தளம், மாவட்ட ஆட்சியரக புதிய கட்டடம், ஈரோடு – 638011.
முக்கிய தேதிகள் மற்றும் கட்டணம்
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க எவ்விதக் கட்டணமும் கிடையாது. விண்ணப்பங்கள் 23.02.2026 மாலை 5 மணிக்குள் உரிய முகவரிக்குச் சென்றடைய வேண்டும். தகுதியான நபர்கள் நேர்காணல் (Interview) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய வேலைவாய்ப்புகள் மற்றும் தமிழக அரசின் வேலை செய்திகளை உடனுக்குடன் பெற எங்களது இணையதளத்தைத் தொடர்ந்து பின்தொடருங்கள்.
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.
Official Notification:
Apply Link:
For More Info:
Name: Diyan
Role: Content Publisher
Expertise: Education, Government Jobs, Public Schemes, News
Language: Tamil & English





