Pongal Parisu Official Announcement 2026: தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த பேச்சுதான் தற்போது அனல் பறந்து கொண்டிருக்கிறது. சமூக வலைத்தளங்களில் “பொங்கல் பரிசாக 1000 ரூபாய் முதல் 3000 ரூபாய் வழங்கப்படும் “, “இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகும்” என்ற செய்திகள் காட்டுத்தீ போலப் பரவி வந்தது.

இதனால் ரேஷன் அட்டைதாரர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. உண்மையில் அரசு அறிவித்தது என்ன? 3000 ரூபாய் கிடைக்குமா? என்பது குறித்த அதிகாரப்பூர்வ மற்றும் உண்மையான நிலவரத்தை இங்கே விரிவாகக் காண்போம்.
பொங்கல் பரிசுத்தொகை
தமிழக அரசு 2026 பொங்கல் திருநாளை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் உள்ள குடும்பங்களுக்கு ரூ.3,000 ரொக்கப் பரிசாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் மகிழ்ச்சி தகவலை அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.
பொங்கல் பரிசு தொகுப்பில் என்ன கிடைக்கும்?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, கூட்டுறவுத் துறை மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தகுதியுள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் (Rice Card Holders) பின்வரும் தொகுப்பு வழங்கப்படும்:
-
ரொக்கப் பணம்: ரூ.3000 (கையிலாக வழங்கப்படும்)
-
பச்சரிசி: 1 கிலோ
-
சர்க்கரை: 1 கிலோ
-
கரும்பு: 6 அடி உயரமுள்ள முழு நீளக் கரும்பு
இந்த பரிசு மூலம் 2,22,91,710க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் குடும்பங்கள் பயன்பெற இருப்பதாகவும் அரசு அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
வேட்டி சேலைகள்:
பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள வேட்டி சேலைகள் அனைத்தும், எல்லா மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பொங்கல் விழாவை மேலும் சிறப்பாக கொண்டாடிட, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் ரொக்கப் பரிசாக ரூ.3000 வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கப் பரிசு என மொத்தம் ரூ.6936 கோடியை அரசு இதற்காக ஒதுக்கியுள்ளது.
இன்று முதல் டோக்கன் விநியோகம்
பொங்கல் பரிசு வழங்கும் திட்டம் வரும் ஜனவரி 8-ம் தேதி முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இதற்காகக் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், டோக்கன் விநியோகம் இன்று (ஜனவரி 4, 2026) முதல் மாநிலம் முழுவதும் தொடங்கியுள்ளது.
நியாய விலைக் கடை பணியாளர்கள் வீடு வீடாக வந்து டோக்கன்களை வழங்கி வருகின்றனர். அந்த டோக்கனில் உங்களுக்குப் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும்.

பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி:
இந்த பரிசு திட்டம் குடும்பங்களின் பொங்கல் செலவுகளை குறைப்பதுடன், மற்றும் சமூக நலத்திட்டங்களுக்கு அரசின் விருப்பமான நிதி ஆதரவை வழங்குவதாகும். பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு இந்த உதவி அதிக மகிழ்ச்சி மற்றும் நன்மையை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.
For More Job Info:
Name: Diyan
Role: Content Publisher
Expertise: Education, Government Jobs, Public Schemes, News
Language: Tamil & English





