பொங்கல் பண்டிகை: சொந்த ஊருக்கு போறீங்களா? அப்போ நீங்க கண்டிப்பா இத தெரிஞ்சிக்கணும்! Pongal Special Buses and Online Booking 2026

Pongal Special Buses and Online Booking 2026: தமிழர்களின் முக்கிய  திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றி தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று வர ஏதுவாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை சார்பில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பை போக்குவரத்துத் துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

Pongal Special Buses and Online Booking 2026
Pongal Special Buses and Online Booking 2026

இந்த மாதம்  ஜனவரி 15-ம் தேதி பொங்கல் கொண்டாடப்பட உள்ள நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஜனவரி 14 முதல் 18 வரை தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக  சென்னையில் இருந்து மட்டும் சுமார் 11.35 லட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனவரி 9 முதல் சிறப்புப் பேருந்துகள்

பொங்கலை ஒட்டி சொந்த ஊர்களுக்கு செல்வோரின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், ஜனவரி 9-ம் தேதி முதலே சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வழக்கமான பேருந்துகளுடன் சேர்த்து இம்முறை மொத்தம் 22,797 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.

Whatsapp Group Join
Telegram Channel Join
Whatsapp Channel Join

ஒவ்வொரு நாட்களுக்கு ஏற்றவாறு பேருந்துகளின் எண்ணிக்கை பின்வருமாறு:

  • ஜனவரி 9: 1,050 பேருந்துகள்

  • ஜனவரி 10: 1,030 பேருந்துகள்

  • ஜனவரி 11: 225 பேருந்துகள்

  • ஜனவரி 12: 2,220 பேருந்துகள்

  • ஜனவரி 13: 2,790 பேருந்துகள்

  • ஜனவரி 14: 2,920 பேருந்துகள் (அதிகபட்சம்) இயக்கப்பட உள்ளது.

பேருந்து நிலையங்களின் விவரங்கள்:

பொங்கலையொட்டி சொந்த ஊருக்கு பயணிகள் குழப்பமின்றிச் செல்லக் கிளாம்பாக்கம், கோயம்பேடு மற்றும் மாதவரம் ஆகிய மூன்று முக்கிய பேருந்து நிலையங்களில்  இருந்து பேருந்துகள் பிரிக்கப்பட்டு இயக்கப்படுகின்றன.

  1. கிளாம்பாக்கம் (KCBT): தென் மாவட்டங்களான திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, சேலம், கோவை மற்றும் கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் இங்கிருந்து புறப்படும்.

  2. கோயம்பேடு (CMBT): ஈசிஆர் (ECR) வழியாகச் செல்லும் பேருந்துகள், காஞ்சிபுரம், வேலூர் மற்றும் பெங்களூரு செல்லும் பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படும்.

  3. மாதவரம்: ஆந்திரா மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் மற்றும் வட மாவட்டப் பேருந்துகள் இங்கிருந்து புறப்படும்.

டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி?

கடைசி நேர நெரிசலைத் தவிர்க்கப் பயணிகள் இப்போதே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

  • இணையதளம்: www.tnstc.in என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது TNSTC மொபைல் செயலி மூலமாகவோ டிக்கெட் புக் செய்யலாம்.

  • வாட்ஸ்அப் வசதி: தொழில்நுட்ப வசதியாக 94440 18898 என்ற வாட்ஸ்அப் எண் மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

  • நேரடி கவுன்ட்டர்: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக 10 சிறப்பு கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.

சொந்த வாகனத்தில் செல்பவர்களுக்கு அட்வைஸ்

சொந்த கார் மற்றும் வேன்களில் ஊருக்குச் செல்பவர்கள், ஜி.எஸ்.டி (GST) சாலையில் ஏற்படும் கடும் டிராபிக்கைத் தவிர்க்கப் பின்வரும் மாற்றுப் பாதையைப் பயன்படுத்துமாறு அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்:

  • பாதை: ஓ.எம்.ஆர் (OMR) – திருப்போரூர் – கேளம்பாக்கம் வழியாகச் செங்கல்பட்டை அடையலாம்.

  • மேலும், வண்டலூர் வெளிவட்டச் சாலையை (Outer Ring Road) பயன்படுத்துவது பயண நேரத்தை வெகுவாகக் குறைக்கும்.

திரும்பி வரவும் வசதி

பொங்கல் பண்டிகையை முடித்து  மக்கள் மீண்டும் சென்னை திரும்பும் வகையில், வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக 6,820 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Pongal Special Buses and Online Booking 2026
Pongal Special Buses and Online Booking 2026

எனவே, கடைசி நேர அவசரத்தைத் தவிர்த்து, முன்கூட்டியே திட்டமிட்டுப் பாதுகாப்பாக ஊருக்குச் சென்று பொங்கலை கொண்டாடி வாருங்கள். இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.

Whatsapp Group Join
Telegram Channel Join
Whatsapp Channel Join

Ticket Booking Link :

For More Job Info:

Leave a Comment