TN Gig Workers Subsidy for E-Scooters 2026: தமிழக அரசு உணவு டெலிவரி மற்றும் ஆன்லைன் நிறுவனங்களில் பணிபுரியும் இளைஞர்களுக்குத் ஒரு சூப்பரான திட்டத்தை தற்போது அறிவித்துள்ளது. கிக் (Gig Workers) தொழிலாளர்கள் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குவதற்கு தமிழக அரசு ரூ.20,000 மானியம் வழங்கும் திட்டத்தை குறித்த முழு விவரம் இந்த பதிவில் பார்க்கலாம்.

மானிய விலையில் இ-ஸ்கூட்டர்கள்
நேற்று (ஜனவரி 5) சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள 100 தொழிலாளர்களுக்கு, அடையாளமாக மானிய விலையில் இ-ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டன. பெட்ரோல் விலை உயர்வால் அவதிப்படும் டெலிவரி ஊழியர்களுக்கு இந்தத் திட்டம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
திட்டத்தின் நோக்கம்
-
மானியம் எவ்வளவு?: தகுதியுள்ள தொழிலாளர்கள் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (e-Scooter) வாங்கும் போது, அரசு சார்பில் ரூ.20,000 மானியமாக வழங்கப்படும். மீதமுள்ள தொகையை மட்டும் நீங்கள் செலுத்தினால் போதும்.
-
எத்தனை பேருக்கு?: முதற்கட்டமாக 2,000 தொழிலாளர்களுக்கு இந்த மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
யாரெல்லாம் தகுதியானவர்கள்:
இந்தச் சலுகையைப் பெற நீங்கள் பின்வரும் நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றில் பணிபுரிபவராக இருக்க வேண்டும்:
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.
-
ஸ்விக்கி (Swiggy)
-
சொமேட்டோ (Zomato)
-
பிளிப்கார்ட் (Flipkart)
-
அமேசான் (Amazon)
-
டன்சோ (Dunzo) மற்றும் இதர ஆன்லைன் டெலிவரி நிறுவனங்கள்.
முக்கிய நிபந்தனை:
விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக “தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் நல வாரியத்தில்” (Tamil Nadu Platform based Gig Workers Welfare Board) உறுப்பினராகப் பதிவு செய்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
-
ஆன்லைன் பதிவு:
www.tnuwwb.tn.gov.inஎன்ற அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். -
இ-சேவை மையம்: ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தெரியாதவர்கள், உங்கள் வீட்டின் அருகில் உள்ள இ-சேவை மையங்களுக்குச் (E-Sevai Centers) சென்று, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் மற்றும் பணிபுரியும் நிறுவனத்தின் ஐடி கார்டு ஆகியவற்றைக் கொடுத்துப் பதிவு செய்து கொள்ளலாம்.
நல வாரியத்தில் இணைவதால் ஏற்படும் நன்மைகள்
கிக் தொழிலாளர்களுக்கென தனியாக நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் உறுப்பினராகச் சேருவதன் மூலம்:
-
விபத்து மரணம் மற்றும் ஊனத்திற்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும்.
-
சென்னை, கோயம்புத்தூர் போன்ற முக்கிய நகரங்களில் களைப்பாற ஓய்வு அறைகள், சார்ஜிங் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

மிஸ் பண்ணாதீங்க!
ஏற்கனவே பெட்ரோல் செலவு கையைக்கடிக்கும் நிலையில், இந்த ரூ.20,000 மானியத்தைப் பயன்படுத்தி எலக்ட்ரிக் வண்டி வாங்கினால், உங்கள் மாத வருமானத்தில் பெரும் பகுதி மிச்சமாகும். எனவே, தகுதியுள்ள டெலிவரி பார்ட்னர்கள் உடனே விண்ணப்பியுங்கள்!
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.
For More Job Info:
Name: Diyan
Role: Content Publisher
Expertise: Education, Government Jobs, Public Schemes, News
Language: Tamil & English





