சென்னை ஆவடி விமானப்படை பள்ளியில் வேலைவாய்ப்பு! 10வது படித்திருந்தால் ரூ.28500 சம்பளம் பெறலாம் – மிஸ் பண்ணிடாதீங்க! Avadi Air Force School Recruitment 2026

Avadi Air Force School Recruitment 2026: மத்திய அரசின் நிரந்தர வேலை தேடிக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு, சென்னையில்  குறிப்பாக ஆவடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் வசிப்பவர்களுக்கு ஒரு மிகச்சிறந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

Avadi Air Force School Recruitment 2026
Avadi Air Force School Recruitment 2026

ஆவடியில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் விமானப்படை பள்ளியில் (Air Force School Avadi) காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 10-வது படித்தவர்கள் முதல் பட்டதாரிகள் வரை அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

இந்த வேலைக்குத் தகுதியானவர்கள் ஆன்லைன் மூலம் 20.01.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். பணியின் முழு விவரம் இங்கு பார்க்கலாம்.

இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.

Whatsapp Group Join
Telegram Channel Join
Whatsapp Channel Join

பணியிட விவரங்கள்:

விமானப்படை பள்ளியில் மொத்தம் 18 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ஆசிரியர் பணி மட்டுமின்றி, 10-வது படித்தவர்களுக்கான உதவியாளர் மற்றும் காவலாளி பணியிடங்களும் உள்ளன. அதன் விவரங்கள் பின்வருவன.

  1. வாட்ச்மேன் (Watchman): 6 காலியிடங்கள்.

  2. ஹெல்பர் (Helper – Ayah/Peon): 4 காலியிடங்கள்.

  3. தொடக்கப்பள்ளி ஆசிரியர் (PRT): 3 காலியிடங்கள்.

  4. நர்சரி ஆசிரியர் (NTT): 4 காலியிடங்கள்.

  5. சிறப்பு ஆசிரியர் (Special Educator): 1 காலியிடம்.

கல்வித் தகுதி:

  • வாட்ச்மேன் மற்றும்  ஹெல்பர்: இந்த இரண்டு பணிகளுக்கும் 10-ம் வகுப்பு (SSLC) அல்லது 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. தமிழுடன் ஆங்கிலம் மற்றும் இந்தி ஓரளவுக்குப் பேசத் தெரிந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.

  • PRT ஆசிரியர்: 12-ம் வகுப்பில் 50% மதிப்பெண்களுடன் D.El.Ed முடித்திருக்க வேண்டும் அல்லது ஏதேனும் ஒரு டிகிரியுடன் B.Ed முடித்திருக்க வேண்டும்.

  • NTT ஆசிரியர்: 12-ம் வகுப்பு தேர்ச்சியுடன் நர்சரி டீச்சர் ட்ரைனிங் அல்லது சிறப்புக்கல்வியில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு (PRT) மாதம் ரூ.28,500 சம்பளமாக வழங்கப்படும். நர்சரி ஆசிரியர்களுக்கு (NTT) மாதம் ரூ.18,000 வழங்கப்படும். 10-ம் வகுப்பு தகுதியில் சேரும் ஹெல்பர் மற்றும் வாட்ச்மேன் பணிகளுக்கு மாதம் ரூ.13,000 சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு விவரங்கள்:

  • ஆசிரியர்கள்: 50 வயதுக்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

  • ஹெல்பர் / வாட்ச்மேன்: 40 வயதுக்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

தேர்வு முறை

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்

விண்ணப்பக் கட்டணமாகப் பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.500 டிடி (DD) எடுக்க வேண்டும். மற்றவர்கள் ரூ.1000 டிடி எடுக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை 

தகுதியுள்ளவர்கள் afschoolavadi.com என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

முகவரி

விண்ணப்பதாரர்கள் The Principal, Air Force School Avadi, Chennai – 600055 என்ற முகவரிக்குத் தபால் மூலம் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.

Avadi Air Force School Recruitment 2026
Avadi Air Force School Recruitment 2026

முக்கிய தேதிகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள் 20.01.2026. அதற்குள் விண்ணப்பம் போய்ச் சேர வேண்டும். சென்னையில் பள்ளி வேலை தேடுபவர்கள் இந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள்!

இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.

Whatsapp Group Join
Telegram Channel Join
Whatsapp Channel Join

Official Notification: 

Apply Link:

For More Job Info:

Leave a Comment