திருச்சி என்ஐடியில் வேலைவாய்ப்பு: 12வது படித்தால் போதும் – மாத சம்பளம் 1 லட்சம் பெறலாம்! NIT Trichy Multiple Job Recruitment 2026

NIT Trichy Multiple Job Recruitment 2026: தமிழ்நாட்டின் அரசு வேலை தேடுபவர்களுக்கு  திருச்சியில் அமைந்துள்ள மத்திய அரசின் முக்கியக் கல்வி நிறுவனமான தேசியத் தொழில்நுட்பக் கழகத்தில் (NIT Trichy) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

NIT Trichy Multiple Job Recruitment 2026
NIT Trichy Multiple Job Recruitment 2026

மத்திய அரசு வேலைக்காகக் காத்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு இது ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாகும். குறிப்பாக 12-ம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கும் வகையில் ஜூனியர் அசிஸ்டென்ட், சீனியர் அசிஸ்டென்ட் மற்றும் சூப்பிரண்டு ஆகிய பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

நல்ல சம்பளம் மற்றும் பணிப் பாதுகாப்புடன் கூடிய இந்த வேலைக்குத் தகுதியானவர்கள் ஆன்லைன் மூலம் 31.01.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். பணியின் முழு விவரம் இங்கு பார்க்கலாம்.

இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.

Whatsapp Group Join
Telegram Channel Join
Whatsapp Channel Join

பணியிட விவரங்கள்:

திருச்சி என்ஐடி வளாகத்தில் நிர்வாகப் பணிகளுக்காக மொத்தம் 08 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் ஜூனியர் அசிஸ்டென்ட் (Junior Assistant) பதவிக்கு 2 இடங்களும், சீனியர் அசிஸ்டென்ட் (Senior Assistant) பதவிக்கு 2 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இவை இரண்டும் குரூப் சி (Group C) வகையைச் சார்ந்த பதவிகளாகும்.

அடுத்ததாக உயர் பதவியான சூப்பிரண்டு (Superintendent) பதவிக்கு 4 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது குரூப் பி (Group B) வகையைச் சார்ந்ததாகும். பணியிடங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், மத்திய அரசு கல்வி நிறுவனத்தில் பணிபுரிவது மிகப்பெரிய கௌரவமாகும்.

கல்வித் தகுதி:

இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கக் கல்வித் தகுதி மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. ஜூனியர் அசிஸ்டென்ட் மற்றும் சீனியர் அசிஸ்டென்ட் ஆகிய இரண்டு பதவிகளுக்கும் 12-ம் வகுப்பு (10+2) தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. ஆனால், விண்ணப்பதாரர்களுக்குக் கணினி தட்டச்சு வேகம் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் இருக்க வேண்டும்.

மேலும் வேர்ட் மற்றும் எக்ஸல் போன்ற கணினிச் செயல்பாடுகளில் நல்ல அறிவு பெற்றிருக்க வேண்டும். சூப்பிரண்டு பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முதல் வகுப்பில் இளங்கலை பட்டம் (Bachelor’s Degree) அல்லது 50 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இவர்களுக்கும் கணினி அறிவு அவசியம்.

சம்பளம் 

இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு 7-வது ஊதியக் குழுவின் படி மிகச்சிறந்த சம்பளம் வழங்கப்படும். ஜூனியர் அசிஸ்டென்ட் பணிக்கு மாதம் 21,700 ரூபாய் முதல் 69,100 ரூபாய் வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சீனியர் அசிஸ்டென்ட் பணிக்கு மாதம் 25,500 ரூபாய் முதல் 81,100 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும். உயர் பதவியான சூப்பிரண்டு பணிக்கு மாதம் 35,400 ரூபாய் முதல் 1,12,400 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும்.

வயது வரம்பு:

இந்த பணிக்கு வயது வரம்பைப் பொறுத்தவரை ஜூனியர் அசிஸ்டென்ட் பணிக்கு 27 வயதுக்குள்ளும், சீனியர் அசிஸ்டென்ட் பணிக்கு 33 வயதுக்குள்ளும், சூப்பிரண்டு பணிக்கு 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.

தேர்வு முறை:

இந்த பணிக்கு விண்ணப்பதாரர்கள் ஸ்கிரீனிங் டெஸ்ட் (Screening Test), திறன் தேர்வு (Skill Test) மற்றும் முதன்மை எழுத்துத் தேர்வு (Main Written Test) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தட்டச்சுத் தேர்வு மிக முக்கியமானது.

விண்ணப்பக் கட்டணம்:

இந்த பணிக்கு விண்ணப்பக் கட்டணமாகப் பெண்கள், எஸ்சி, எஸ்டி மற்றும் முன்னாள் ராணுவத்தினர் 500 ரூபாய் செலுத்த வேண்டும். மற்ற பிரிவினர் (General/OBC) 1000 ரூபாய் செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை 

இந்த பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் திருச்சி என்ஐடி-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான nitt.edu என்ற முகவரிக்குச் சென்று ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

முக்கிய தேதிகள்

இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிம் தொடங்கிய நாள் 02.01.2026 ஆகும். ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள் 30.01.2026. தமிழ்நாட்டிலேயே மத்திய அரசுப் பணியில் சேர விரும்பும் 12-ம் வகுப்பு மற்றும் டிகிரி முடித்தவர்கள் கடைசி தேதி வரை காத்திருக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

NIT Trichy Multiple Job Recruitment 2026
NIT Trichy Multiple Job Recruitment 2026

விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு:

இந்த பணிக்கு தகுதியுள்ளவர்கள், இந்த வாய்ப்பை தவற விடாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அரசு வேலை பெற கனவு காணும் இளைஞர்களுக்கு இந்த அறிவிப்பு நிச்சயம் ஒரு நல்ல செய்தியாக அமைந்துள்ளது.

இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.

Whatsapp Group Join
Telegram Channel Join
Whatsapp Channel Join

Official Notification: 

Apply Link:

For More Job Info:

Leave a Comment