NIT Trichy Recruitment 2026: “சொந்த ஊரான திருச்சியிலேயே ஒரு நிரந்தரமான மத்திய அரசு வேலை கிடைத்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்?” அதுவும் கை நிறையச் சம்பளம், கௌரவமான பதவி என்றால் சும்மாவா? லக் அடித்தது போல் இருக்கும் அல்லவா.

இந்தியாவின் தலைசிறந்த தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் ஒன்றான திருச்சி தேசியத் தொழில்நுட்பக் கழகத்தில் (NIT Trichy) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்கள் முதல் டிகிரி முடித்தவர்கள் வரை இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இது குறித்த முழு விவரங்களை இங்கே விரிவாகக் காண்போம் உடனே வாருங்கள் இந்த பதிவில் காணலாம்.
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.
பணியிட விவரங்கள் (Job Vacancy Details):
திருச்சி என்.ஐ.டி-யில் (National Institute of Technology) குரூப் B மற்றும் குரூப் C வகையிலான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 08 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் பின்வருமாறு,
1. ஜூனியர் அசிஸ்டென்ட் (Junior Assistant – Group C)
-
காலியிடங்கள்: 02
-
கல்வித் தகுதி: 12-ம் வகுப்பு (10+2) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் டைப்பிங் செய்யும் திறனும், கணினி அறிவும் (Word Processing / Spread Sheet) அவசியம்.
-
சம்பளம்: மாதம் ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை கிடைக்கும்.
-
வயது வரம்பு: 27 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.
2. சீனியர் அசிஸ்டென்ட் (Senior Assistant – Group C)
-
காலியிடங்கள்: 02
-
கல்வித் தகுதி: 12-ம் வகுப்பு தேர்ச்சி + டைப்பிங் திறன் + கணினி அறிவு அவசியம்.
-
சம்பளம்: மாதம் ரூ.25,500 முதல் ரூ.81,100 வரைகிடைக்கும்.
-
வயது: 33 வயதுக்குள் இருக்க வேண்டும்.
3. சூப்பிரண்டு (Superintendent – Group B)
-
காலியிடங்கள்: 04
-
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு துறையில் முதல் வகுப்பில் டிகிரி (First Class Degree) முடித்திருக்க வேண்டும். அல்லது 50% மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் (Master’s Degree) பெற்றிருக்க வேண்டும். கணினிப் பயன்பாட்டில் அறிவு அவசியம்.
-
சம்பளம்: மாதம் ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை கிடைக்கும். (இது ஒரு உயர் அதிகாரிக்கான சம்பள விகிதமாகும்).
-
வயது: 30 வயதுக்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு மற்றும் கட்டண விவரங்கள்:
-
வயது தளர்வு: எஸ்சி/எஸ்டி (SC/ST) பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி (OBC) பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
-
விண்ணப்பக் கட்டணம்:
-
பெண்கள், எஸ்சி, எஸ்டி மற்றும் முன்னாள் ராணுவத்தினர்: ரூ.500/-
-
மற்ற பிரிவினருக்கு (General/OBC/EWS): ரூ.1,000/-
-
மாற்றுத்திறனாளிகளுக்கு (PWD): கட்டணம் கிடையாது.
-
தேர்வு முறை (Selection Process)
விண்ணப்பதாரர்கள் ஸ்கிரீனிங் டெஸ்ட் (Screening Test), திறன் தேர்வு (Skill Test – Typing/Computer) மற்றும் முதன்மை எழுத்துத் தேர்வு (Main Written Test) அடிப்படையில் இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?
விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
-
முதலில்
www.nitt.eduஎன்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும். -
முகப்புப் பக்கத்தில் உள்ள ‘Recruitment’ பகுதியில் Non-Teaching Staff அறிவிப்பைத் தேர்வு செய்யவும்.
-
விண்ணப்பப் படிவத்தில் விவரங்களைப் பூர்த்தி செய்து, புகைப்படம் மற்றும் கையெழுத்தைப் பதிவேற்றம் செய்யவும்.
-
கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தி விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவும்.
முக்கிய தேதிகள்
-
விண்ணப்பிக்கத் தொடங்கிய நாள்: 02.01.2026
-
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 30.01.2026

விண்ணப்பிப்பவர்கள் கருத்தில் கொள்ள வேண்டியது:
திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு இது ஒரு அருமையான வாய்ப்பு. மத்திய அரசு வேலை என்பதால் போட்டியும் அதிகமாக இருக்கும். கடைசித் தேதி வரை காத்திருக்காமல், இன்றே விண்ணப்பியுங்கள்! உங்களுக்கு வெற்றி நிச்சயம்…
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.
Official Notification:
Apply Link:
For More Job Info:
Name: Diyan
Role: Content Publisher
Expertise: Education, Government Jobs, Public Schemes, News
Language: Tamil & English





