சொந்த வீடு வாங்க ஆசையா? லோன் வாங்குவது இவ்வளவு ஈஸியா! வங்கிக்கு போகும் முன் இதை படியுங்கள் || Home Loan Application Process Guide 2026

Home Loan Application Process Guide 2026: ஒவ்வொரு தமிழரின் வாழ்நாள் கனவு “சொந்த வீடு” என்பது வாங்குவது ஆகும். வாடகை வீட்டில் மாதந்தோறும் பணத்தை கொட்டுவதை விட, அந்த பணத்தை இஎம்ஐ (EMI) ஆக கட்டிவிட்டு சொந்த வீட்டிலேயே ராஜாவாக வாழலாம் என்று நினைப்பவர்கள் ஏராளம்.

Home Loan Application Process Guide 2026
Home Loan Application Process Guide 2026

ஆனால், “வீட்டுக் கடன் (Home Loan) வாங்குவது குதிரை கொம்பு, வங்கிக்கு நடையாய் நடக்க வேண்டும்” என்று பயந்து பலரும் அந்த கனவை தள்ளிப்போடுகிறார்கள். கவலை வேண்டாம்! சரியான திட்டமிடலும், முறையான ஆவணங்களும் இருந்தால், வீட்டுக் கடன் வாங்குவது மிக மிக எளிது. வங்கிக்குச் செல்லும் முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முழுமையான வழிகாட்டி இதோ.

நீங்கள் செக் செய்ய வேண்டிய விஷயங்கள்:

வங்கிக்குள் செல்வதற்கு  முன்னரே, உங்களுக்கு கடன் கிடைக்குமா? எவ்வளவு கிடைக்கும்? என்பதை நீங்களே சுயபரிசோதனை செய்து கொள்வது நல்லது.

இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.

Whatsapp Group Join
Telegram Channel Join
Whatsapp Channel Join
  • வயது வரம்பு: நீங்கள் 21 வயது முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும்.

  • வருமானம்: மாத சம்பளம் அல்லது சொந்த தொழில் மூலம் நிலையான வருமானம் வர வேண்டும்.

  • சிபில் ஸ்கோர் (CIBIL Score): இதுதான் வங்கியின் பாஸ்வேர்ட். உங்கள் சிபில் ஸ்கோர் 750-க்கு மேல் இருந்தால், வங்கி மேலாளரே உங்களை அழைத்து கடன் கொடுப்பார். அதுமட்டுமல்ல, குறைந்த வட்டியும் கிடைக்கும்.

வங்கியை தேர்ந்தெடுக்கும் முறை 

நீங்கள் அவசரப்பட்டு ஏதாவது  வங்கியில் விண்ணப்பிக்காதீர்கள். பொதுத்துறை வங்கிகள் (SBI, Indian Bank, Canara Bank) மற்றும் தனியார் வங்கிகள் (HDFC, ICICI) என பலவற்றிலும் வட்டி விகிதம் (Interest Rate) மற்றும் பிராசஸிங் கட்டணத்தை (Processing Fee) ஒப்பிட்டு பாருங்கள். எங்கு குறைவோ அங்கு விண்ணப்பியுங்கள்.

தேவையான  முக்கிய ஆவணங்கள்

வெறும் கையை வீசிக் கொண்டு வங்கிக்கு செல்லாமல், கீழ்க்கண்ட ஆவணங்களின் ஒரு செட் நகலை (Xerox) கையில் தயாராக வைத்திருங்கள்:

  • அடையாளச் சான்று: ஆதார் அட்டை, பான் கார்டு (PAN Card), வாக்காளர் அட்டை.

  • வருமானச் சான்று (சம்பளதாரர்கள்): கடைசி 3 மாத சம்பள ரசீது (Payslip), 6 மாத வங்கி ஸ்டேட்மெண்ட், 2 வருட பார்ம்-16 (Form-16).

  • வருமானச் சான்று (தொழில் செய்வோர்): 3 வருட ஐடி ரிட்டர்ன்ஸ் (IT Returns), ஜிஎஸ்டி சான்று, வங்கி கணக்கு விவரம்.

  • சொத்து ஆவணங்கள்: கிரயப் பத்திரம் (Sale Deed), தாய் பத்திரம், வில்லங்கச் சான்று (EC – 13 வருடங்கள்), பட்டா, சிட்டா மற்றும் வரைபட அனுமதி (Approved Plan).

விண்ணப்பிக்கும் முறை (How to Apply)

இப்போது வங்கிகள் ஹைடெக் ஆகிவிட்டன. அதனால் 

  • நேரில்: வங்கிக்கு சென்று விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து ஆவணங்களை இணைத்து கொடுக்கலாம்.

  • ஆன்லைன்: வங்கியின் இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலமாகவும் இருந்த இடத்திலிருந்தே விண்ணப்பிக்கலாம்.

லீகல் மற்றும் வேல்யூவேஷன் (Legal & Valuation)

நீங்கள் விண்ணப்பித்ததும், வங்கி மூலம்  உங்கள் சொத்து பத்திரங்களை சரிபார்க்கப்படும்  (Legal Check). வில்லங்கம் ஏதும் இல்லை என்பதை உறுதி செய்வார்கள். அடுத்து, பொறியாளர் (Engineer) வந்து வீட்டின் மதிப்பை கணக்கிடுவார். இவை இரண்டும் சரியாக இருந்தால், உங்கள் கடன் உறுதி செய்யப்படும்.

சாங்ஷன் லெட்டர் (Sanction Letter)

எல்லாம் சரியாக இருந்தால், வங்கி உங்களுக்கு ‘சாங்ஷன் லெட்டர்’ கொடுக்கும். அதில் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடன் தொகை, வட்டி விகிதம், மாத தவணை (EMI) மற்றும் கால அளவு ஆகியவை இருக்கும். இதில் கையெழுத்திட்ட பிறகு, பணம் உங்கள் கைக்கு அல்லது பில்டருக்கு வந்து சேரும்.

ஒரு முக்கிய டிப்ஸ்:

வீட்டுக் கடன் வாங்கும் போது, முடிந்தவரை உங்கள் மனைவி அல்லது குடும்ப உறுப்பினரை இணை விண்ணப்பதாரராக (Co-applicant) சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் உங்கள் கடன் பெறும் தகுதி அதிகரிப்பதோடு, சில வங்கிகளில் வட்டி விகிதத்தில் சலுகையும் கிடைக்கும்.

Home Loan Application Process Guide 2026
Home Loan Application Process Guide 2026

இனி ஏன் தாமதம்? ஆவணங்களை ரெடி பண்ணுங்க.. சொந்த வீட்டு கனவை நனவாக்குங்கள்! நன்றி 

இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.

Whatsapp Group Join
Telegram Channel Join
Whatsapp Channel Join

For More Job Info:

Leave a Comment