உங்கள் கனவு நிறைவேற! முதல்வரின் “உங்கள் கனவ சொல்லுங்க” திட்டம்.. முழு விவரம் இதோ || TN Govt Ungal Kanava Sollungal Scheme 2026

TN Govt Ungal Kanava Sollungal Scheme 2026: “அரசாங்கம் நமக்கு என்ன தரும்?” என்று எதிர்பார்த்துக் காத்திருந்த காலம் மலையேறிவிட்டது. “உங்களுக்கு என்ன வேண்டும்? உங்கள் குடும்பத்தின் லட்சியம் என்ன? அதைச் சொல்லுங்கள், நாங்கள் நிறைவேற்றி வைக்கிறோம்” என்று அரசே உங்கள் வீடு தேடி வரும் ஒரு புரட்சிகரமான திட்டத்தைத் தற்போது தமிழக அரசு கையில் எடுத்துள்ளது.

TN Govt Ungal Kanava Sollungal Scheme 2026
TN Govt Ungal Kanava Sollungal Scheme 2026

நேற்று (ஜனவரி 9) திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூரில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் பிரம்மாண்டமாகத் தொடங்கி வைக்கப்பட்ட திட்டம் தான் “உங்கள் கனவ சொல்லுங்க” (Unga Kanava Sollunga) திட்டம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இது ஏதோ சாதாரண கணக்கெடுப்பு என்று நினைத்துவிடாதீர்கள்; உங்கள் வாழ்க்கைத் தரத்தையே உயர்த்தப்போகும் ஒரு ‘லைஃப் சேஞ்சிங்’ திட்டம்! இதன் முழு விவரம் இதோ.

இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.

Whatsapp Group Join
Telegram Channel Join
Whatsapp Channel Join

திட்டத்தின் முக்கிய நோக்கம்:

இதுவரை ரேஷன் அரிசி, பொங்கல் பரிசு, மகளிர் உரிமைத் தொகை எனப் பல திட்டங்கள் மக்களைச் சென்றடைந்துள்ளன. ஆனால், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு தனிப்பட்ட கனவு (Dream) இருக்கும்.

  • ஒருவருக்குச் சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கலாம்.

  • இன்னொருவருக்குத் தன் பிள்ளையை டாக்டர் அல்லது இன்ஜினியர் ஆக்க வேண்டும் என்ற லட்சியம் இருக்கலாம்.

  • இளைஞர்களுக்குச் சொந்தத் தொழில் தொடங்கும் கனவு இருக்கலாம்.

இப்படிப்பட்ட தனிப்பட்ட கனவுகளைக் உங்களிடமிருந்து கேட்டறிந்து, அவற்றை நிறைவேற்றுவதற்கான நீண்டகாலத் திட்டங்களை (Long-term Goals) வகுப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.

வீடு தேடி வரும் “கனவு அட்டை” (Dream Card):

இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமே ‘கனவு அட்டை’ தான் கொடுப்பதாகும். அடுத்த 30 நாட்களுக்குத் தமிழகம் முழுவதும் உள்ள 1.91 கோடி குடும்பங்களையும் தன்னார்வலர்கள் (Volunteers) நேரில் சந்திக்க உள்ளனர்.

  1. உங்கள் வீட்டிற்கு வரும் களப்பணியாளர்கள், உங்கள் குடும்ப உறுப்பினர்கள் விவரம், வருமானம் போன்றவற்றைச் சரிபார்ப்பார்கள்.

  2. முக்கியமாக, “உங்கள் குடும்பத்தின் எதிர்காலக் கனவு என்ன?” என்ற கேள்வியை முன்வைப்பார்கள்.

  3. உங்கள் பதிலை (கல்வி, சுகாதாரம், தொழில், வீடு போன்றவை) அவர்கள் தங்கள் மொபைல் செயலியில் பதிவு செய்வார்கள்.

  4. பதிவு செய்தவுடன், உங்கள் குடும்பத்திற்கு ஒரு பிரத்யேக ‘கனவு அட்டை’ (Dream Card) உங்களுக்கு வழங்கப்படும்.

கனவு அட்டை பயன்கள்:

இந்த ‘கனவு அட்டை’ வெறும் அட்டை அல்ல; அது அரசுக்கும் உங்களுக்குமான ஒரு நேரடிப் பாலம் ஆகும். இதில் ஒரு ‘தனித்துவ அடையாள எண்’ (Unique ID) இருக்கும்.

  • எதிர்காலத்தில் அரசு அறிவிக்கும் புதிய திட்டங்களில், உங்கள் கனவுக்குப் பொருத்தமான திட்டங்கள் வரும்போது, உங்களுக்கு முன்னுரிமை அளிக்க இந்த அட்டை உதவும்.

  • www.uks.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக, உங்கள் கோரிக்கை எந்த நிலையில் உள்ளது என்பதை இந்த எண்ணை வைத்துத் தெரிந்து கொள்ளலாம்.

நாம் செய்ய வேண்டியது:

  • அடுத்த சில நாட்களில் உங்கள் வீட்டுக் கதவை தன்னார்வலர்கள் தட்டுவார்கள்.

  • அவர்களிடம் உங்கள் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு விவரங்களைக் காண்பித்து, தகவல்களை உறுதி செய்யுங்கள்.

  • மிக முக்கியமாக, உங்கள் தேவையைத் தெளிவாகச் சொல்லுங்கள். “எங்களுக்குத் தொழில் தொடங்க கடன் வேண்டும்”, “விவசாயத்திற்கு மானியம் வேண்டும்”, “மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வேண்டும்” – இப்படி எதுவானாலும் தயங்காமல் சொல்லுங்கள்.

முதல்வரின்  வாக்குறுதி:

திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “மக்களின் எண்ணங்களே அரசின் திட்டங்களாக மாற வேண்டும். 2030-ம் ஆண்டிற்குள் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி பெற்ற மாநிலமாகத் தமிழகத்தை மாற்ற, உங்கள் கனவுகள் எனக்குத் தெரிய வேண்டும். அதற்காகவே நான் உங்களைத் தேடி வருகிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

TN Govt Ungal Kanava Sollungal Scheme 2026
TN Govt Ungal Kanava Sollungal Scheme 2026

கவனிக்க வேண்டியது:

இது உங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் திட்டம். எனவே, சர்வே எடுக்க வருபவர்களிடம் சரியான தகவல்களைக் கொடுத்து, தவறாமல் உங்கள் ‘கனவு அட்டையை’ பெற்றுக் கொள்ளுங்கள்!

இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.

Whatsapp Group Join
Telegram Channel Join
Whatsapp Channel Join

For More Info:

Leave a Comment