TN Govt Namma Arasu WhatsApp service 2026: “பிறப்புச் சான்றிதழ் வாங்க தாலுகா ஆபீஸ் போகணுமா? பட்டா சிட்டா பார்க்க இ-சேவை மையம் போகணுமா?” இனி அந்தக் கவலையே வேண்டாம். காலையில் எழுந்து வரிசையில் நிற்பது, லீவு போட்டுவிட்டு அலைவது எனப் நாம் படும் கஷ்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தமிழக அரசு ஒரு சூப்பரான திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து சேவைகளையும் பெறும் வகையில், ‘நம்ம அரசு’ (Namma Arasu) என்ற வாட்ஸ்அப் சேவையைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. 78452 52525 என்ற இந்த மேஜிக் நம்பரில் என்னென்ன வசதிகள் கொட்டிக் கிடக்கின்றன? இதை எப்படிப் பயன்படுத்துவது? என்பதை பற்றி இங்கே விரிவாகக் காண்போம்.
ஒரே நம்பரில் 50+ சேவைகள்!
பொதுவாகச் சான்றிதழ் வாங்குவதற்கு இணையதளம் பயன்படுத்தும்போது சர்வர் பிஸி என்று வரும் அல்லது எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியாது. ஆனால், சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பயன்படுத்தும் ‘வாட்ஸ்அப்’ மூலமாகவே இந்தச் சேவைகளை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.
இந்த 78452 52525 என்ற எண்ணில் தொடர்பு கொள்வதன் மூலம், சுமார் 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை உங்கள் விரல் நுனியில் பெற முடியும்.
என்னென்ன சேவைகள் பெறலாம்:
-
முக்கியச் சான்றிதழ்கள்: பிறப்புச் சான்றிதழ் (Birth Certificate), இறப்புச் சான்றிதழ் (Death Certificate), வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்றிதழ் போன்றவற்றை நீங்கள் இ-சேவை மையத்திற்குச் செல்லாமலே பிடிஎஃப் (PDF) வடிவில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
-
பட்டா / சிட்டா: நிலம் சம்பந்தப்பட்ட பட்டா, சிட்டா விவரங்களை நொடியில் சரிபார்க்கலாம்.
-
குடும்ப அட்டை சேவை: புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்திருந்தால் அதன் நிலை என்ன? எப்போது கிடைக்கும்? போன்ற விவரங்களை அறிந்துகொள்ளலாம் .
-
பெண்கள் & மாணவர் நலம்: முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை விவரங்களையும் அறிந்துகொள்ளலாம்.
-
புகார் அளிக்கலாம்: உங்கள் தெருவில் குப்பை தேங்கியுள்ளதா? அல்லது வேறு ஏதேனும் அரசு சார்ந்த புகார்களா? அதையும் இந்த வாட்ஸ்அப் எண்ணிலேயே பதிவு செய்யலாம்.
பயன்படுத்தும் முறை:
ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவரும் இதை மிக எளிதாகப் பயன்படுத்தலாம்.
-
படி 1: முதலில் +91 78452 52525 என்ற எண்ணை உங்கள் மொபைலில் ‘Namma Arasu’ அல்லது ‘Govt Service’ என்று சேவ் செய்து கொள்ளுங்கள்.
-
படி 2: வாட்ஸ்அப் ஓபன் செய்து அந்த எண்ணிற்கு “Hi” என்று ஒரு மெசேஜ் தட்டி விடுங்கள்.
-
படி 3: உடனே உங்களுக்குத் தமிழ் அல்லது ஆங்கிலம் (Tamil / English) மொழியைத் தேர்வு செய்யச் சொல்லும் ஒரு மெசேஜ் வரும். அதில் ‘தமிழ்’ என்பதைத் தேர்வு செய்யுங்கள்.
-
படி 4: இப்போது திரையில் ஒரு பட்டியல் வரும். அதில் உங்களுக்குத் தேவையான சேவையை (உதாரணமாக: சான்றிதழ் சேவை) கிளிக் செய்தால் போதும். அடுத்த சில வினாடிகளில் அதற்கான விவரம் அல்லது லிங்க் உங்களுக்கு வந்துவிடும்.
இந்த செயலியின் நன்மைகள்:
-
24 மணி நேரமும் இயங்கும்: அரசு அலுவலகம் போல காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை என்று நேரம் பார்க்கத் தேவையில்லை. இரவு 12 மணிக்குக் கூட நீங்கள் சான்றிதழ் எடுக்கலாம்.
-
இலவசம்: இடைத்தரகர்களுக்கோ அல்லது மையங்களுக்கோ பணம் கொடுக்கத் தேவையில்லை.

இனி சின்னச் சின்ன வேலைகளுக்கெல்லாம் விடுப்பு எடுத்துக்கொண்டு அரசு அலுவலகப் படிகளில் ஏறத் தேவையில்லை. மக்களே, இன்றே இந்த எண்ணைச் சேவ் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பயனுள்ள தகவலை உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் உடனே ஷேர் செய்யுங்கள்!
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.
For More Info:
Name: Diyan
Role: Content Publisher
Expertise: Education, Government Jobs, Public Schemes, News
Language: Tamil & English





