e-Shram Card Apply 2026: “இன்னைக்கு உழைச்சா தான் நாளைக்குச் சோறு… வயசானா என்ன பண்றது?” என்ற கவலை தினக்கூலி வேலைக்குச் செல்பவர்கள் பலருக்கும் இருக்கும். அந்தக் கவலையைப் போக்கி, எதிர்காலத்திற்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் ஒரு உன்னதமான திட்டம் தான் ‘இ-ஷ்ரம்’ (e-Shram).

இதுவரை 30 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் இதில் இணைந்து பயனடைந்துள்ளனர். நீங்களும் இன்னும் இணையவில்லையா? இதன் நன்மைகளைப் படித்தால் உடனே விண்ணப்பித்து விடுவீர்கள்!
யாருக்கான திட்டம் இது?
கட்டிடத் தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், தெருவோர வியாபாரிகள், தையல் கலைஞர்கள், காய்கறி விற்பவர்கள் என அமைப்பு சாரா துறையில் (Unorganized Sector) வேலை பார்க்கும் கோடிக்கணக்கான மக்களுக்காகவே இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.
அரசு வழங்கும் நலத்திட்டங்கள், இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக ஏழை எளிய மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கம்.
அதிரடி நன்மைகள் என்ன?
இந்த ‘இ-ஷ்ரம்’ கார்டு (e-Shram Card) வைத்திருப்பதால் கிடைக்கும் சலுகைகள் ஏராளம்:
-
மாதம் ரூ.3000 பென்ஷன்: இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய சிறப்பம்சம் ஓய்ூதியம். இத்திட்டத்தில் இணையும் தொழிலாளர்களுக்கு, 60 வயது பூர்த்தியான பிறகு மாதம் ரூ.3000 பென்ஷனாக வழங்கப்படும்.
-
டிப்ஸ்: ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி இருவரும் இதில் இணைந்தால், முதுமைக் காலத்தில் அந்தத் தம்பதிக்கு மாதம் ரூ.6000 வரை வருமானம் கிடைக்கும்.
-
-
ரூ.2 லட்சம் விபத்துக் காப்பீடு: வேலைக்குச் செல்லும் இடத்தில் ஏதேனும் விபத்து ஏற்பட்டு உயிரிழக்க நேரிட்டால், அந்தக் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.
-
ஊனமுற்றால் உதவி: விபத்தின் காரணமாக நிரந்தர ஊனம் ஏற்பட்டால் ரூ.1 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை கிடைக்கும்.
-
மருத்துவ உதவி: பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் உள்ளிட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களுடன் இது இணைக்கப்படுவதால், மருத்துவச் செலவுகளுக்கும் இது கைகொடுக்கும்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? (தகுதிகள்)
-
வயது: 16 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்கள் இ-ஷ்ரம் கார்டு பெறலாம். (பென்ஷன் திட்டத்திற்கு 18 முதல் 40 வயதுக்குள் இணைவது சிறந்தது).
-
வருமானம்: ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்குக் கீழ் இருக்க வேண்டும்.
-
PF (வருங்கால வைப்பு நிதி) மற்றும் ESI பிடித்தம் செய்யப்படும் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியாது. வருமான வரி (IT) கட்டுபவர்களும் இதற்குத் தகுதியற்றவர்கள்.
தேவையான ஆவணங்கள்
விண்ணப்பிக்கக் கையில் பெரிய ஆவணங்கள் எதுவும் தேவையில்லை.
-
ஆதார் கார்டு (Aadhaar Card)
-
ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண் (OTPக்காக)
-
வங்கி பாஸ்புக் (Bank Passbook)
-
வாரிசுதாரர் விவரம் (Nominee)
விண்ணப்பிப்பது எப்படி?
நீங்களே உங்கள் மொபைலில் 5 நிமிடத்தில் விண்ணப்பிக்கலாம். அல்லது அருகில் உள்ள இ-சேவை மையம் (CSC) சென்றும் விண்ணப்பிக்கலாம்.
-
eshram.gov.inஎன்ற இணையதளத்திற்குச் செல்லவும். -
‘Register on e-Shram’ என்பதை கிளிக் செய்யவும்.
-
ஆதார் எண் மற்றும் மொபைல் எண்ணைக் கொடுத்து OTP பெறவும்.
-
கேட்கப்படும் விவரங்களை நிரப்பி, ஆவணங்களை அப்லோட் செய்தால் உடனடியாக உங்களுக்கான UAN (Universal Account Number) அடங்கிய இ-ஷ்ரம் கார்டு டவுன்லோட் ஆகிவிடும்.

முற்றிலும் இலவசமான இந்தத் திட்டத்தில் இன்றே இணையுங்கள். கொரோனா காலத்தில் பலருக்கும் உதவிய இந்தத் திட்டம், உங்கள் எதிர்காலத்திற்கும் நிச்சயம் கைகொடுக்கும்!
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.
For More Info:
Name: Diyan
Role: Content Publisher
Expertise: Education, Government Jobs, Public Schemes, News
Language: Tamil & English





