India Post Recruitment 2026:“அரசு வேலைக்குப் போகணும், ஆனா எக்ஸாம் எழுதி பாஸ் பண்றது கஷ்டமா இருக்கு” என்று கவலைப்படுபவரா நீங்கள்? அந்தக் கவலையைத் தூக்கி எறியுங்கள். தேர்வோ, நேர்காணலோ இல்லாமல், நீங்கள் பத்தாம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்ணை மட்டுமே வைத்து, மத்திய அரசு வேலை வாங்கும் ஒரு பொன்னான வாய்ப்பு காத்துக் கொண்டிருக்கிறது.

இந்திய அஞ்சல் துறை (India Post), நாடு முழுவதும் காலியாக உள்ள சுமார் 28,000 கிராமின் டாக் சேவக் (GDS) பணியிடங்களை நிரப்பத் தயாராகி வருகிறது. இதுகுறித்த முக்கியத் தகவல்கள் இதோ.
எக்ஸாம் இல்லாத அரசு வேலை!
இந்தியாவிலேயே அதிக கிளைகளைக் கொண்ட மிகப்பெரிய நெட்வொர்க் நம் அஞ்சல் துறைதான். இதில் கிராமப்புற அஞ்சல் ஊழியர் (Gramin Dak Sevak – GDS), கிளை அஞ்சல் அதிகாரி (BPM) மற்றும் உதவி கிளை அஞ்சல் அதிகாரி (ABPM) ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.
வழக்கமாக அரசு வேலை என்றாலே எழுத்துத் தேர்வு, மெயின் எக்ஸாம், இன்டர்வியூ எனப் பல கட்டங்கள் இருக்கும். ஆனால், இந்த வேலைக்கு எந்தத் தேர்வும் கிடையாது.
யார் விண்ணப்பிக்கலாம்? (தகுதிகள்)
-
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 10-ம் வகுப்பு (SSLC) தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும்.
-
முக்கிய நிபந்தனை: 10-ம் வகுப்பில் கணிதம் மற்றும் ஆங்கிலம் பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழி (தமிழ்நாட்டில் விண்ணப்பித்தால் தமிழ்) தெரிந்திருக்க வேண்டும்.
-
பிற தகுதிகள்: சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். (இப்போதெல்லாம் பைக் ஓட்டத் தெரிந்தாலே போதுமானது). கணினி குறித்த அடிப்படை அறிவு இருப்பது நல்லது.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
-
OBC பிரிவினருக்கு: 3 ஆண்டுகள் தளர்வு.
-
SC/ST பிரிவினருக்கு: 5 ஆண்டுகள் தளர்வு.
-
மாற்றுத்திறனாளிகளுக்கு: 10 ஆண்டுகள் வரை வயது வரம்பில் தளர்வு உண்டு.
ஆட்களைத் தேர்வு செய்வது எப்படி?
இதுதான் ஹைலைட்! நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது, உங்கள் 10-ம் வகுப்பு மதிப்பெண்களைப் பதிவிட வேண்டும். நாடு முழுவதும் விண்ணப்பித்தவர்களின் மதிப்பெண்களைக் கணக்கிட்டு, கம்ப்யூட்டர் மூலமாகவே தானியங்கி முறையில் தரவரிசைப் பட்டியல் (Merit List) வெளியிடப்படும்.
அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு போஸ்டிங் போடப்படும். தமிழகத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு நம் மாநிலத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.
சம்பளம் எவ்வளவு?
வேலையில் சேர்பவர்களுக்குப் பணி மற்றும் நேரத்தைப் பொறுத்து (TRCA) சம்பளம் வழங்கப்படும்.
-
BPM (கிளை அஞ்சல் அதிகாரி): ரூ.12,000 – ரூ.29,380 வரை.
-
ABPM (உதவி அஞ்சல் அதிகாரி): ரூ.10,000 – ரூ.24,470 வரை. இது தவிர மற்ற படிகளும் வழங்கப்படும். சொந்த ஊரிலேயே வேலை என்பதால் இது ஒரு நல்ல வருமானம்.
விண்ணப்பிப்பது எப்படி?
விருப்பமுள்ளவர்கள் indiapostgdsonline.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
-
கட்டணம்: பொது மற்றும் ஓபிசி (ஆண்கள்) பிரிவினருக்கு ரூ.100 விண்ணப்பக் கட்டணம்.
-
இலவசம்: அனைத்துப் பிரிவுப் பெண்கள், SC/ST பிரிவினருக்குக் கட்டணம் கிடையாது.
முக்கியக் குறிப்பு
விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. 490 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்தவர்கள், அரசு வேலை கனவில் இருப்பவர்கள் இப்போதே சான்றிதழ்களைத் தயாராக வைத்துக்கொள்ளுங்கள். அறிவிப்பு வந்ததும் முதல் ஆளாக அப்ளை செய்துவிடுங்கள்!

இந்தச் செய்தியை 10-ம் வகுப்பு முடித்து வேலை தேடும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு மறக்காமல் ஷேர் செய்யுங்கள்!
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.
Official Notification:
Apply Link:
For More Info:
Name: Diyan
Role: Content Publisher
Expertise: Education, Government Jobs, Public Schemes, News
Language: Tamil & English





