TN TET Pass Mark Reduction Expected Soon 2026: தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளி ஆசிரியர் கனவோடு காத்திருக்கும் லட்சக்கணக்கான தேர்வர்களுக்கு, விரைவில் ஒரு இனிப்பான செய்தி தேடி வரப்போகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வில் (TNTET) தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண்ணை மேலும் குறைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை, தற்போது அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தற்போதுள்ள தேர்ச்சி மதிப்பெண்ணான 82-ஐ, 75-ஆகக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இது நடந்தால், வெறும் சில மதிப்பெண்களில் வாய்ப்பைத் தவறவிட்ட பல்லாயிரக்கணக்கானோர் ஒரே நாளில் தேர்ச்சி பெற்றவர்களாக மாறுவார்கள்!
தற்போதைய நிலை என்ன?
மத்திய அரசின் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ‘டெட்’ எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்தும் இத்தேர்வில்:
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.
-
பொதுப் பிரிவினர் (OC): 60% அதாவது 90 மதிப்பெண்கள் பெற வேண்டும்.
-
இடஒதுக்கீட்டுப் பிரிவினர் (BC, BC(M), MBC/DNC, SC, SC(A)): 55% அதாவது 82 மதிப்பெண்கள் பெற வேண்டும்.
ஆனால், இந்த 82 மதிப்பெண்கள் என்ற இலக்கை எட்ட முடியாமல் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக லட்சக்கணக்கான தேர்வர்கள் தவித்து வருகின்றனர். 75 முதல் 81 மதிப்பெண்கள் எடுத்து, நூலிழையில் தோல்வியடைந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் மிக அதிகம்.
அண்டை மாநிலங்களில் ‘ஈசி’ பாஸ்!
“டெட் தேர்வு என்பது பணி நியமனத் தேர்வு அல்ல; அது வெறும் தகுதித் தேர்வு மட்டுமே. இதில் ஏன் இவ்வளவு கெடுபிடி?” என்பதே தேர்வர்களின் முதன்மைக் கேள்வியாக உள்ளது. நம் அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் கேரளா போன்றவற்றில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 50% மதிப்பெண்கள் (அதாவது 75 மதிப்பெண்கள்) எடுத்தாலே தேர்ச்சி என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. “அண்டை மாநிலங்களில் இருக்கும் இந்த நடைமுறையைத் தமிழ்நாட்டிலும் அமல்படுத்த வேண்டும். சமூக நீதியின் அடிப்படையில் 5% மதிப்பெண் தளர்வு வழங்க வேண்டும்,” என்று ஆசிரியர் சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
எஸ்டி (ST) பிரிவினருக்கு ஏற்கனவே சலுகை!
தமிழக அரசு ஏற்கனவே பழங்குடியினர் (ST) பிரிவினருக்கு ஒரு சிறப்புச் சலுகையை வழங்கியுள்ளது. அதன்படி, அவர்கள் 55% (82 மதிப்பெண்கள்) எடுக்க வேண்டியதில்லை; 40% அதாவது 60 மதிப்பெண்கள் எடுத்தாலே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே பாணியில், மற்ற இடஒதுக்கீட்டுப் பிரிவினரான பிசி, எம்பிசி மற்றும் எஸ்சி பிரிவினருக்கும் 82-லிருந்து 75-ஆகக் குறைக்க வேண்டும் என்பதுதான் தற்போதைய பிரதான கோரிக்கை.
அரசாணை எப்போது?
சமீபத்தில் உச்சநீதிமன்றம், ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்களும் டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் எனக் கெடு விதித்துள்ளது. இதனால் பணிப் பாதுகாப்பின்றி தவிக்கும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களைக் காப்பாற்றவும், புதிய தேர்வர்களுக்கு வழிவிடவும் மதிப்பெண் குறைப்பு ஒன்றே நிரந்தரத் தீர்வாக இருக்கும்.

பள்ளிக் கல்வித்துறை வட்டாரத் தகவல்களின்படி, இந்த 5% மதிப்பெண் குறைப்பு (82 to 75 Marks) குறித்த கோப்பு அரசின் பரிசீலனையில் உள்ளதாகவும், விரைவில் இதுகுறித்த சந்தோஷமான அரசாணை (G.O.) வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி ஒரு அறிவிப்பு வந்தால், அது தமிழக ஆசிரியர் தேர்வு வரலாற்றில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை!
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.
For More Info:
Name: Diyan
Role: Content Publisher
Expertise: Education, Government Jobs, Public Schemes, News
Language: Tamil & English





