New Smart Ration Card Online Apply 2026: தமிழகத்தில் புதிதாகத் திருமணம் ஆனவர்கள் மற்றும் கூட்டுக் குடும்பத்தில் இருந்து பிரிந்து தனிக்குடித்தனம் செல்பவர்களுக்கு, மிக முக்கியமான ஆவணம் ‘ரேஷன் கார்டு’ (Smart Ration Card). முன்பு புதிய ரேஷன் கார்டு வாங்குவது என்பது குதிரைக் கொம்பாக இருந்தது. தாலுகா அலுவலகத்திற்கும், வட்ட வழங்கல் அலுவலகத்திற்கும் செருப்பு தேய அலைய வேண்டியிருக்கும்.

ஆனால், இனி அந்த கவலையே வேண்டாம்! உங்கள் கையில் ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் போதும், வீட்டிலிருந்தே புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து, தபாலில் கார்டைப் பெற்றுக்கொள்ளலாம். அது எப்படி என்று விரிவாகப் பார்ப்போம்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
-
புதிதாகத் திருமணம் ஆன தம்பதிகள்.
-
பழைய ரேஷன் கார்டில் இருந்து பெயரை நீக்கம் செய்தவர்கள்.
-
கூட்டுக் குடும்பத்தில் இருந்து பிரிந்து தனி வீடு செல்பவர்கள்.
தேவையான ஆவணங்கள் (Documents Checklist)
விண்ணப்பிக்கும் முன் கீழ்க்கண்ட ஆவணங்களை ஸ்கேன் செய்து அல்லது போட்டோ எடுத்துத் தயாராக வைத்துக் கொள்ளுங்கள்:
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.
-
குடும்பத் தலைவர் புகைப்படம்: (File size 5 MB-க்குள் இருக்க வேண்டும்).
-
முகவரி ஆதாரம்: ஆதார் அட்டை, மின்சார ரசீது, வங்கிப் பாஸ் புத்தகம், வாடகை ஒப்பந்தம் அல்லது எரிவாயு ரசீது (Gas Bill) – இவற்றில் ஏதேனும் ஒன்று. (File size 1 MB-க்குள் இருக்க வேண்டும்).
-
பிற விவரங்கள்: குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் எண்கள் மற்றும் பிறந்த தேதி.
-
பெயர் நீக்கச் சான்று: பழைய கார்டில் இருந்து பெயர் நீக்கியதற்கான சான்று அவசியம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? (Step-by-Step Guide)
படி 1: முதலில் தமிழக அரசின் உணவுப்பொருள் வழங்கல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpds.gov.in என்ற பக்கத்திற்குச் செல்லவும்.
படி 2: முகப்புப் பக்கத்தில் “மின்னணு அட்டை சேவைகள்” என்ற பகுதியில் “புதிய மின்னணு அட்டை விண்ணப்பிக்க” என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
படி 3: “புதிய அட்டை விண்ணப்பம்” என்ற பக்கம் திறக்கும். அதில் குடும்பத் தலைவரின் பெயரை ஆங்கிலத்திலும், தமிழிலும் பிழையில்லாமல் டைப் செய்யவும்.
படி 4: முகவரி, மாவட்டம், வட்டம், கிராமம் மற்றும் உங்கள் மொபைல் எண் ஆகியவற்றைச் சரியாகப் பூர்த்தி செய்யவும். (மொபைல் எண் மிக முக்கியம், அதில் தான் ஓடிபி வரும்).
படி 5: “உறுப்பினரைச் சேர்க்க” என்ற பட்டனை அழுத்தி, மனைவி, குழந்தைகள் மற்றும் இதர உறுப்பினர்களின் பெயர், பாலினம், பிறந்த தேதி, ஆதார் எண் ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் பதிவு செய்யவும்.
படி 6: “அட்டைத் தேர்வு” என்ற இடத்தில் உங்களுக்குப் பொருட்கள் வேண்டும் என்றால் “அரிசி அட்டை” (Rice Card) அல்லது பொருட்கள் வேண்டாம் என்றால் “சர்க்கரை அட்டை” என்பதைத் தேர்வு செய்யவும்.
படி 7: முன்னரே ஸ்கேன் செய்து வைத்துள்ள குடும்பத் தலைவர் புகைப்படம் மற்றும் முகவரிச் சான்று ஆகியவற்றை “பதிவேற்றம்” (Upload) செய்யவும். எரிவாயு இணைப்பு இருந்தால் அந்த விவரங்களையும் கொடுக்க வேண்டும்.
படி 8: அனைத்தும் சரியாக உள்ளதா எனச் சரிபார்த்துவிட்டு, “பதிவு செய்” (Submit) என்ற பட்டனை அழுத்தவும்.
கார்டு எப்போது கிடைக்கும்?
விண்ணப்பித்தவுடன் உங்கள் மொபைலுக்கு ஒரு குறிப்பு எண் (Reference Number) வரும். இதை வைத்து tnpds இணையதளத்திலேயே “விண்ணப்பத்தின் நிலை” என்ற பகுதியில் உங்கள் கார்டு ஸ்டேட்டஸை செக் செய்து கொள்ளலாம்.
அதிகாரிகள் உங்கள் ஆவணங்களைச் சரிபார்த்து ஒப்புதல் அளித்தவுடன், சுமார் 15 முதல் 30 நாட்களுக்குள் உங்கள் மொபைலுக்கு குறுஞ்செய்தி வரும். அதன்பின், அருகில் உள்ள இ-சேவை மையம் அல்லது வட்ட வழங்கல் அலுவலகத்தில் உங்கள் புதிய ஸ்மார்ட் கார்டைப் பெற்றுக்கொள்ளலாம்.

இனி இடைத்தரகர்களை நம்பிப் பணத்தை இழக்காதீர்கள்.. இந்த எளிய முறையைப் பின்பற்றி இன்றே விண்ணப்பியுங்கள்!
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.
Apply Link:
For More Job Info:
Name: Diyan
Role: Content Publisher
Expertise: Education, Government Jobs, Public Schemes, News
Language: Tamil & English





